News Update :
Home » » அசிங்கமான தமிழினப் படுகொலைகள்

அசிங்கமான தமிழினப் படுகொலைகள்

Penulis : Antony on வெள்ளி, 3 டிசம்பர், 2010 | பிற்பகல் 12:14

மனித நேயம், போர்க்குற்றம், மனித உரிமை மீறல் என்று காலம் காலமாக வாய்கிழிய கத்திக்கொண்டு இருக்கும் மனித உரிமை ஆர்வலர்களே! சர்வதேச உலகமே! இந்த கோரப்படுகொலைகளை செய்த இனவெறி இராணுவத்தையும் அதை பின்னால் நின்று இயக்கிக் கொண்டிருந்த சிங்கள பேரினவாதிகளையும், அழித்தவர்கள் பயங்கரவாதிகளா.. இந்த இனவெறியர்களுடனா சமாதானம் பேசச்சொன்னீர்கள்? இந்த இனவெறியர்களுடனா சேர்ந்து வாழச் சொல்கிறீர்கள்? இந்த இனவெறி பிடித்தவர்களா எமக்கு நல்ல ஒரு அரசியல் தீர்வு தரப்போகின்றார்கள்? பயங்கரவாதிகளை அழிக்கத் துணைபோகிறோம் என்று சொல்லிக்கொண்டு முழுப் பயங்கரவாதிகளிடமல்லவா எம்மை அழைத்து வந்து விட்டிருக்கிறீர்கள். இவ்வளவு கொடுமைகளையும் பார்த்துவிட்டு இன்னும் இன்னும் மெளனமாக இருக்கிறீர்களே? இந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமானால் இன்னும் எத்தனை எத்தனை கொடுமைகளை நீங்கள் பார்க்கவேண்டும்? அல்லது நாங்கள் தமிழர்கள் இன்னும் எத்தனை எத்தனை கொடுமைகளை அனுபவிக்க வேண்டும்? இதையெல்லாம் பார்க்கும்போது என்ன எண்ணத் தோன்றுகின்றதென்றால் சிங்கள இனவெறியர்கள் மட்டுமல்ல சர்வதேசமே தமிழர்களை அழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்களா? இந்த ஒளிப்பட காட்சிகளை என்னால் தொடர்ந்து முழுமையாக பார்க்க முடியவில்லை. உடலில் என்னென்னவோ உபாதைகள் ஏற்படுகின்றது. வயிற்றுக்குள் ஒரு உறுப்புக்களுமே இல்லாதது போன்று தோன்றுகின்றது. வயிற்றைப் பிடுங்கிக்கொண்டு சத்திதான் வருகிறது. இத்தனை கொடுமையான காட்சிகளை நாம் பார்த்தும் ஏன் நாம் தமிழர்கள் இன்னும் இன்னும் பிரிந்து நிற்கின்றோம்? ஏன் நாம் தமிழர்கள் இன்னும் இன்னும் எமது உரிமைக்கான போராட்ட களத்தில் பின்னுக்கு நிற்கிறோம்? அனலாய்க் கனந்து கொண்டிருக்கும் இதயத்துடன் இருக்கும் தமிழர்கள் நாங்கள் நெருப்பான எமது மூச்சுக் காற்றால் ஒரேமூச்சில் இனவெறி பிடித்த சிங்கள தேசத்தை ஊதித் தள்ளிவிட மாட்டோமா? இந்த இனவெறிபிடித்த சிங்களவனுக்கு தெரிந்த ஒரே பாஷை இந்த ஒளிப்பட காட்சியில் இருப்பதான வன்முறை தான். தமிழர்கள் அந்த பாஷையில் தான் இந்த இனவெறிபிடித்த சிங்களவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். சர்வதேசம் எமது கையில் விலங்குபோட்டு அந்த பாஷையிலே பேசுவதை மெளனிக்க வைத்திருக்கின்றார்கள். இனிமேலும் நாம் தமிழர்கள் இப்படியே மெளனித்திருந்தால் இந்த இனவெறிச் சிங்களவர்கள் பேசுவதற்கு வாயும் இல்லது செய்துவிடுவார்கள். புலிகளை அழித்தபின் சிங்கள இனவெறியர்கள் பயப்படுவது தமிழர்களின் ஒற்றுமையை பார்த்தே. ஏற்கனவே சிங்களம் தமிழர்களின் ஒற்றுமையில் கை வைத்துவிட்டார்கள். அதுதான் நாங்கள் கண்கூடாக பார்க்கிறோமே, இங்கு ஐரோப்பாவிலும் ஏனைய பிற நாடுகளிலும் நாம் பிரிந்து வேறு வேறு திசைகளில் நிற்கிறோம். விடுதலைப்புலிகளையும், அதன் செயற்பாட்டாளர்களையும், அவர்கள் பின்னால் நின்ற பொதுமக்களையும் ஒருவரை ஒருவர் நம்பமுடியாமல் மூன்றாகவும் நான்காகவும் உடைத்து பிரிந்து நிற்கும்படி செய்திருக்கிறார்கள் எல்லோரும் என்னை மன்னித்து கொள்ளுங்கள். நான் சொல்லுவது யதார்த்தம். என்னுடைய கூற்று பலரது ஆள் மனங்களிலே சுட்டிருக்கலாம். நாம் எல்லோருமே ஒரு கணம் எம்மை நாமே எம் நெஞ்சங்களிலே கைவைத்து கேட்டுக்கொள்வோம். உண்மையிலேயே நாம் தமிழர்கள் ஒற்றுமையாகவா இருக்கிறோம்? உணர்ச்சி பொங்க பேசினால் மட்டும் உண்மை பொய்யாகிவிடாது, பொய் உண்மையாகிவிடாது. எனவே தேசியத்தை நேசிக்கும் ஒவ்வொரு தமிழனும் அனைத்து பேதங்களையும் மறந்து ஒரு குடையின் கீழ் ஒன்றுசேர வேண்டும். பிரித்தானியாவில் மகிந்த ராஜபக்சவின் வருகைக்கெதிராக தற்பொழுது ஒன்றுசேர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஒற்றுமை இன்றுமுதல் உலகம் பூராகவும் இருக்கின்ற தமிழர்களிடத்தில் எப்பொழுதும் நிலைக்க வேண்டும். நாம் ஒன்று சேர்ந்துவிட்டால் இந்த உலகம் எம்முன்னால் ஒரு சிறு பருக்கை. இந்த சந்தர்ப்பத்திலும் கூட நாம் ஒன்று படவில்லையாயின் நாம் பார்த்து நிற்க எம் கண்முன்னே எம்மினம் பூண்டோடு அழிக்கப்படும்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger