
இதுகுறித்து அந்த பேரவை மேலும் கூறியுள்ளதாவது, லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வந்திருக்கும் ராஜபக்சேவை எவ்வகையிலாவது கைது செய்ய வைப்பதே முதன்மை இலக்கு. அதற்காக லண்டன் தமிழர் பேரவை இங்கிலாந்தின் மிகப் பிரபலமான சட்ட நிறுவனம் ஒன்றுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. ராஜபக்சேவை கைது செய்விப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் குறித்து அவர்கள் ஆராய்ந்து கொண்டுள்ளனர்.
ஒரு நாட்டின் தலைவர் என்ற ரீதியில் இராஜதந்திர அந்தஸ்திலுள்ள ஜனாதிபதியைக் கைது செய்ய முடியாது போனால் அவருடன் கூட வந்திருக்கும் இராணுவ அதிகாரிகளையாவது கைது செய்ய வைப்பது தமிழர் பேரவையின் இலக்காக உள்ளது. அதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இறுதி போரின்போது கொடூரமாகக் கொல்லப்பட்ட 45 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களின் மரணங்களுக்கு பதில் சொல்ல வேண்டியவர்களை எந்த வகையிலாவது தண்டிப்பதே தமது நோக்கு என்று லண்டன் தமிழர் பேரவை கூறியுள்ளது.
கருத்துரையிடுக