
போர்க்குற்றத்தின் அடிப்படையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை கைது செய்வதற்கு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ராஜபக்சே, அரசு முறை பயணமாக பிரிட்டன் சென்றிருந்தார்.
அங்கே தமிழர்கள் அவரது வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பயணத்தில் திருப்தி இல்லாமலேயே நாடு திரும்பினார் ராஜபக்சே. இந்நிலையில், பிரிட்டன் வாழ் தமிழர்கள் போர்க்குற்றவாளி ராஜபக்சேவை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த பிரிட்டன் நீதிமன்றம் கடந்த 2ம் தேதி ராஜபக்சேவை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது.
ஜனநாயக ரீதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் ஒருவரை வேறு நாட்டில் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கருத்துரையிடுக