
பாகிஸ்தானி சைபர் ஆர்மி’ எனக்கூறிக்கொள்ளும் அமைப்பொன்றின் தாக்குதலுக்கு(ஹெக்கிங்) உள்ளான நிலையில் இந்திய மத்தியப் புலனாய்வுப் பணியகத்தின் இணையதளம் மூடப்பட்டுள்ளது.
வெள்ளியன்று இரவு இந்த சைபர் தாக்குதல் இடம்பெற்றதாகக்கூறும் சிபிஐ இன் பேச்சாளர் ஒருவர், இணையதளத்தை மீள சீர்செய்யும் பணிகள் நடைபெற்றுவருவதாகக் கூறினார். இன்னும் சில நாட்கள் இதற்குத் தேவையென்றும் அவர் குறிப்பிட்டார்.
‘இந்தியன் சைபர் ஆர்மி’ என்று அழைத்துக்கொள்ளும் அமைப்பினால் ஏற்கனவே பாகிஸ்தானிய இணையதளங்களில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பழிதீர்க்கும் பொருட்டே இந்த தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தானி சைபர் ஆர்மி’ என்பவர்கள் இந்திய இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
‘பாகிஸ்தான் சிந்தாபாத்’ (பாகிஸ்தான் வாழ்க) என்றும் அவர்கள் அதில் கையொப்பமிட்டுள்ளனர்.
கருத்துரையிடுக