
நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி எம்.பிகள் பாட்டுப் பாடி சபையை கலகலப்பு ஆக்கினர். ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயா ஸ்ரீ ஜயசேகர, அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா ஆகியோரே ஏட்டிக்கு போட்டியாக பாடியவர்கள் ஆவர்.
வரவுசெலவுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தயா ஸ்ரீ ஜயசேகர எம்.பி. சிரேஷ்ட அமைச்சர்களின் நிலைமையை நக்கல் அடிக்கும் வகையில் சொந்தமாகப் பாடல் ஒன்றை இயற்றிப் பாடினார்.
இதற்குப் பதில் அடி கொடுக்கும் வகையில் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா பாடலை பாடினார். ஐ.தே.கட்சி மாநாடு முடிவுற்ற பின் தயா ஸ்ரீ ஜயசேகர எம்.பியின் நடவடிக்கைகள் குறித்து அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாடும் பாடல் என்று விளக்கமும் கொடுத்து இருந்தார்.
கருத்துரையிடுக