
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகின்றமைக்காக கடந்த வாரம் பிரிட்டன் சென்றிருந்தார்.
அங்கு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களால் மகிந்தருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதனால் பாதுகாப்புக் காரணங்களுக்காக மகிந்தரின் உரை ஏற்பாட்டாளர்களால் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு.....
தமிழீழ விடுதலைப் புலிகளின் வால்கள் சுமார் 4000 பேரை அடக்க முடியாத நிலையில் பிரிட்டன் இருக்கின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரிலேயே சென்றிருந்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காடையர்கள் போலவும் காட்டுமிராண்டிகள் போலவும் செயல்பட்டு இருந்தனர். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவருக்கு வயது வெறும் 19 மாத்திரம்.
அவர் புலிகளின் அழுத்தம் காரணமாக ஜனாதிபதியின் உரையை ரத்துச் செய்யும் தீர்மானத்தை எடுத்தார். இதே நபர்தான் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அப்பல்கலைக்கழகத்தில் உரையாற்ற அனுமதி வழங்கி இருந்தார்.
கருத்துரையிடுக