
இம்முறை நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய புனர்வாழ்வளிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களில் தொண்ணூறு வீதமானவர்கள் அமோக சித்தி பெற்றுள்ளதாக பரீட்சைப் பெறுபேறுகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றிய 360 பேரில் 210 போ் மூன்று பாடங்களிலும் சித்தி பெற்றுள்ளனர். அவர்களில் 60 போ் வரையானோர் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகும் தகுதியைக் கொண்டுள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் சுதந்த ரணசிங்க தமிழ்வின்னுக்குத் தெரிவித்துள்ளார்.
அவர்களில் இருவர் மருத்துவ பீடத்துக்குத் தெரிவாகும் தகுதியைக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 31 போ் மட்டுமே மூன்று பாடங்களிலும் சித்தி பெறத் தவறியிருக்கின்றார்கள். உயர்தரப் பரீட்சைக்கென குறுகிய காலத்துக்குள் தயார்படுத்தப்பட்டமையும் அதற்கான காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துரையிடுக