
டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தூதுவராக இருந்த Geoffrey Pyatt இந்த ஆவணத்தை அமைச்சுக்கு அனுப்பி இருக்கின்றார்.
இந்தியாவின் மூத்த இராஜதந்திரிகளில் ஒருவரான கே.ஜி.சிங் என்பவரை மேற்கோள் காட்டி இத்தகவலை வழங்கி உள்ளார். " இந்திய உயர் அதிகாரிகள் இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதம் வேர் விடுகின்றது குறித்து மிகவும் அவதானமாக உள்ளனர்.
இஸ்லாமிய ஜித்தா தீவிரவாதிகளின் செயல்பாடு இலங்கையில் மெல்ல தலை தூக்க பார்க்கின்றது என்றும் இது பெரிதும் கவலை தருகின்றது என்றும் தூதுவர் சிங் தெரிவித்தார். இது குறித்து இந்தியாவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் இதில் பாகிஸ்தானின் பங்கு இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர் என்றும் கூறினார்.
இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் பரவுமானால் இந்தியாவின் பாதுகாப்புக்கு பேராபத்தாகி விடும் என்று அவர் குறிப்பிட்டார். " இவ்வாறு மேற்படி ஆவணத்தில் கூறப்பட்டு உள்ளது.
கருத்துரையிடுக