
ஐ.நா. செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்கப் போவதில்லை என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்துத் தமக்கு ஆலோனை வழங்குவதற்காக பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட குழுவின் இலங்கை வருகை தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எமது எதிர்ப்புக்கு மத்தியில் அவர்கள் இலங்கையில் காலடி வைப்பார்களானால் இந்த நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி போராடத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவர்களின் இலங்கை வருகையானது, உண்மைக்குப் புறம்பான விடயங்களைச் சோடித்து பொய்ச் சாட்சியங்களையும் உருவாக்கி இவற்றின் மூலம் இலங்கைக்கு எதிராகச் செயற்படுவதாகவே அமையுமெனவும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
home



Home
கருத்துரையிடுக