News Update :
Home » » வன்னியில் போர்க்காலங்களில் மக்களுக்காக தீவிரமாக உழைத்த கிராம சேவையாளர் மரணம்

வன்னியில் போர்க்காலங்களில் மக்களுக்காக தீவிரமாக உழைத்த கிராம சேவையாளர் மரணம்

Penulis : Antony on சனி, 18 டிசம்பர், 2010 | AM 12:42

யாழ் மாவட்டத்தில் இரண்டு கிராமங்களுக்கு கிராம சேவையாளராக இறக்கும் வரை பொறுப்பு வகித்தவரும் வன்னியில் போர்க்காலங்களில் தீவிரமாக உழைத்தவருமான மயில்வாகனம் சுந்தரலிங்கம் 14-12-2010 செவ்வாய்க் கிழமை அன்று காலமானார்.

இவர் 1979 ஆம் ஆண்டு யாழ் மாநகரசபை உறுப்பினராகவும், 1982 ஆம் ஆண்டு சமூக சேவை உத்தியோகத்தராகவும், 1988 - 1995 வரை யாழ் பிரதேச செயலகதிற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் கிராம உத்தியோகத்தராக இருந்து சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.

இவர் 1995 இல் யாழ் குடாநாடில் இருந்து கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்து 1996 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்த பின் கந்தபுரத்தில் கிராம சேவையாளராக இருந்து போர்க்கால இக்கட்டான குறுகிய வளங்கள் உள்ள சூழ்நிலையிலும் மக்களுக்காக தீவிரமாக உழைத்தார். .

அப்பிரதேச மக்களின் இன்ப துன்பங்களில் அவர்களின் குடும்ப அங்கத்தவர் போலவே அவர்களுடன் இருந்து 2002 ஆம் ஆண்டு சமாதான காலப்பகுதி வரை வன்னியில் பணியாற்றினர்.

2002 ஆம் ஆண்டு பிற்பகுதியில் மீண்டும் யாழ்ப்பாணம் வந்த இவர் J / 66 ஈச்சமோட்டை கிராம சேவையாளராகவும் , 2009 ஆம் ஆண்டு வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கி இருந்த மக்களை விடுவித்து அவர்களை சொந்த இடங்களில் குடியேறுவதற்கு முன்னின்று உழைத்ததுடன் , ஈச்சமோட்டை கிராமத்துடன் J / 67 ( திருநகர் ) ஆகிய இரு கிராமங்களுக்கும் கிராம சேவையாளராக இருந்து சேவையாற்றினார்.

இறுதியில் யாழ் மாவட்ட கிராம உத்தியோகத்தர் சங்க தலைவராக இருந்தார். ஈச்சமோட்டை கிராமத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு வழிகளிலும் உழைத்தார்.

இவற்றில் ஈச்சமோட்டை சனசமூக நிலையம் , ஈச்சமோட்டை விளையாட்டு கழகம் ஆகியவற்றின் தலைவராகவும் இருந்து சிறியோர் , இளையோர் , பெரியோர் , என வேறுபாடில்லாமல் அனைவருக்கும் நண்பனாக இருந்து பணியாற்றினார். இவரின் பிரிவு ஈச்சமோட்டை மக்களையும் , இவர் பணியாற்றிய யாழ் , வன்னி , பிரதேச மக்களையும் மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.


.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger