
சமாதான காலப் பகுதியில் அவர்கள் தம்மை பலப்படுத்திக் கொள்வதில் குறியாக இருந்தமையாலேயே பேச்சுக்கள் கைவிடப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.
அம்பாறையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பொலிஸ் மற்றும் அரச அதிகாரிகளை தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் யுத்தமொன்று இல்லாத காலப் பகுதியில் நீதியமைச்சின் பொறுப்பினை ஜனாதிபதி எனக்கு வழங்கியிருக்கின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது.
பொறுப்புள்ள அரசு என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் புலிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மனத்தை இன்று நாட்டின் சகல தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகளுடனான சமாதான உடன்படிக்கையின் காலப் பகுதியில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுக்களின் போது கலந்து கொண்ட அரசியல் தலைவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.
அந்த சந்தர்ப்பத்தில் அதிகமாக அரசியல் தீர்வு குறித்தே பேசப்பட்டது. ஆனாலும் விடுதலைப் புலிகளுக்கு சமாதானப் பேச்சுக்களிலும் அரசியல் தீர்விலும் நாட்டம் இருக்கவில்லை. மாறாக புலிகள் தம்மைப் பலப்படுத்திக் கொள்வதிலேயே குறியாக இருந்தனர்.
காவல்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை என சகல மட்டத்திலும் தம்மை பலப்படுத்திக் கொண்டிருந்த அதேவேளை சமாதானப் பேச்சுக்களையும் கைவிட்டனர். இதன் பின்னரே அதன் முன்னெடுப்புகள் கைவிடப்பட்டன.
இதனையடுத்து பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டு அது மாவிலாற்றில் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.
ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தை இன்று நாட்டு மக்கள் அங்கீகரித்துள்ளனர். ஜனாதிபதியையும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றார்.
கருத்துரையிடுக