
திருட்டு நகையை கொள்வனவு செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ள யாழ்.மாவட்ட வர்த்தகர்கள் விடயத்தில் பொலிஸாரின் நடவடிக்கைகள் காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொண்டுள்ளதாக யாழ்.வர்த்தக சமூகம் குற்றம் சாட்டியிருக்கின்றது.
நேற்று முன்தினம் யாழ்.மாவட்ட வர்த்தகர்கள் மூவர் திருட்டு நகைகளை கொள்வனவு செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பெயரில் விசாரிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி யாழ்.நகைத்தொழில் ஊழியர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடிவிட்டு வர்த்தக சங்க பிரதிநிதிகளை நேற்று காலை சந்தித்தனர். இதன்போது வர்த்தகர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே வர்த்தகர்கள் மேற்கண்டவாறு கூறினர்.
ஆவர்கள் மேலும் குறிப்பிடும்போது. யாழ்.குடாநாட்டிhல் தற்போதுள்ள நிலைமை நாங்கள் அனைவரும் அறிந்த ஒன்றாகவேயிருக்கின்றது. இதற்காக நாம் எதனையும் செய்யமுடியாது. எனவே பணப்பிளக்கம் மற்றும் பெறுமதியான பொருட்களை வைத்து வியாபாரம் செய்வோர் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
வவுனியாவில் இருந்து கூட்டிவரப்பட்ட திருடன் ஒருவன் யாழ்.நகரில் மூன்று வர்த்தகர்களை காட்டிக்கொடுத்துள்ளார். அவரிடம் இருந்து இந்த மூன்று வர்த்தகர்களும் கொள்வனவு செய்த பவுண் பொலிஸாரினால் மீளப்பெறப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கான கடிதங்கள் எதனையும் கொடுக்கவில்லையென வர்த்தகர்கள் கூறியிருக்கின்றனர். மேலும் கைது செய்யப்பட்டவர் முக்கால் பவுண் நகையே கொள்வனவு செய்ததாகவும் பொலிஸாரினால் கூட்டிவரப்பட்ட திருடன் இவர் 25 பவுண் நகை வாங்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளான்.
வர்த்தகர் தான் வாங்கிய பவுணுக்கான விபரத்தை பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியிருப்பதாகவே தோன்றுகின்றது. மேலும் பொலிஸாருக்கு முன்னாலேயே திருடன் தான் இரண்டு கொலைகள் செய்ததாகவும் வர்த்தகர்களை மிரட்டியுள்ளார்.
இதுதான் இன்றுள்ள நிலைமையாகவுள்ளது. மேலும் குறித்த வர்த்தகர் நேற்று மாலை 7 மணிக்கெல்லாம் கைது செய்யப்பட்டு விட்டார். ஆனால் 10 மணிக்கே பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அது வரைக்கும் எங்கு கொண்டு செல்லப்பட்டார். என்பதெல்லாம் கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும் வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டபோது பொலிஸார் சீருடை அணிந்திருக்கவில்லை. சிவில் உடையிலேயே வந்துள்ளனர். எனவே பொலிஸார் தாங்கள் வேறு இனத்தவர் என்பதை காட்ட முனைகிறாரர. இவ்வாறான செயற்பாடுகள் எமக்கு மனவேதனையளிப்பதாகவிருக்கின்றது எனவும் கூறியிருக்கின்றனர்.
இதேவேளை நேற்று நண்பகலுடன் நகரில் வழமைபோல் கடைகள் மீளவும் திறக்கப்பட்டன. அண்மைக்காலமாக யாழ்.வர்த்தக சமூகத்தின் மீது தனது அடாவடித்தனத்தை கட்டவிழ்த்து விடுவதில் பொலிஸார் கண்ணும் கருத்துமாக உள்ளது.
இதற்குமேல் கைது செய்யப்பட்ட வர்த்தகர்களிடம் பொலிஸார் கையூட்டல் பெற முற்பட்டதாகவும் வர்த்தகர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

கருத்துரையிடுக