
வாகரையின் கட்டுமுறிப்பு பிரதேசத்திலேயே குண்டுகளும் வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் வாகரைப் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனையின் போதே அவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைக்குண்டுகள் மூன்று மற்றும் நூற்றுக்கும் அதிகமான மிதிவெடிகள் என்பன அவற்றில் உள்ளடங்கியிருந்ததாக தெரிய வருகின்றது.
கைப்பற்றப்பட்ட குண்டுகள் மற்றும் வெடிப்பொருட்களில் வெளிநாட்டுத் தயாரிப்புகள் மட்டுமன்றி விடுதலைப் புலிகளின் சுய தயாரிப்புகளும் உள்ளடங்கியிருப்பதாக வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் திருமலை உப்புவெளி பிரதேசத்தின் சாம்பல் தீவு பிரதேசத்திலும் கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.
கருத்துரையிடுக