
வடமாகாணத்தில் அடுத்த ஆண்டு மூன்று மாவட்டங்களில் இறப்பர் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் சுமார் 7 ஏக்கர் நிலப்பரப்பில் ஆறு கட்டங்களாக இந்த பரீட்சார்த்த இறப்பர் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
பெருந்தோட்டத்துறை அமைச்சின் கண்காணிப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிறேமதாச தெரிவித்தார்.
“ ஏற்கனவே மேற்கொள்ளப்பட் ஆய்வுகளின் படி வடக்கில் இறப்பர் பயரிடுவதற்கு காலநிலை மற்றும் மண்ணின் தன்மை என்பன சாதகமாக உள்ளது தெரியவந்துள்ளது.
இயற்கை இறப்பருக்கான கேள்வியும் விலையும் உலக சந்தையில் அதிகரித்துள்ளதால் அதிகளவு பிரதேசத்தில் இறப்பரைப் பயிரிட்டு ஏற்றுமதியை அதிகரிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.“ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக