சிறீலங்காவின் சுகாதார அமைச்சர் சாலிந்த திசநாயகா 10.12.2010 பெங்களூர் அரண்மனை மைதானத்திற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பல்வேறு தமிழ் அமைப்புகளை சார்ந்தவர்கள் உட்பட சுமார் 40 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு ஐந்து நாள் சிறைக்கு பின் நேற்று விடுதலையாயினர்,இப்போராட்டத்தினை கர்நாடக தமிழர் கூட்டமைப்பு ஒருங்கிணைத்திருந்தது.
கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம், பெங்களூர் தமிழர் நலச்சங்கம், நாம் தமிழர் கட்சி, கருநாடக கிறித்துவர் முன்னணி, முத்துக்குமார் இளைஞர் மன்றம், திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்பினர் கைதாகி விடுதலையானார்கள்.
அவர்களுக்கு தமிழ் உணர்வாளர்களால் உற்சாக வரவேற்ப்பு வழங்கப்பட்டது.






home



Home
கருத்துரையிடுக