
கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.
அனைத்துலக மட்டத்தில் சிறிலங்காவுக்கு ஏற்பட்டுள்ள அபகீர்த்தியை சரிபடுத்திக் கொள்வதற்கும், அதிபர் மகிந்த ராஜபக்சவின் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு சிறிலங்கா அரசு ஒத்துழைக்க வேண்டும்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைப் போர்க்குற்றவாளி என்று முத்திரை குத்துவதற்கு ஆளும்தரப்பைச் சேர்ந்த சிலரே சதி செய்கின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் விமல் வீரவன்சவையோ, ஜி.எல்.பீரிசையோ, தினேஸ் குணவர்த்தனவையோ பாதிக்கப் போவதில்லை.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மட்டுமே இதற்கு முகம் கொடுக்க நேரிடும்.
அவர் தன்னைச் சுற்றியிருப்பவர்களின் கதைகளை கேட்டுக் கொண்டிருந்தால் அது கிணற்றுக்குள் இருந்து தவளைகள் கத்துவது போலவே அமையும்.
அனைத்துலக நீதிமன்றத்தில் இருந்து மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பாணை வருவதைத் தவிர்க்க முடியாது போகும்". என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக