
மகிந்த பிரித்தானியா வந்தவேளை பல்வேறு தமிழ் இளைஞர்கள் அவரைத் தாக்க முற்படலாம் எனவும், அவர் உயிருக்கு தம்மால் உத்தரவாதம் தரமுடியாது எனவும் பிரித்தானிய உளவு நிறுவனமான M.I 5 அமைப்பு ஸ்காட்லன் யாட் பொலிசாருக்குத் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து 1ம் திகதி மாலை 1.00 மணியளவில் பிரித்தானிய புலனாய்வுப் பொலிசாரானா ஸ்காட்லன் யாட் பொலிசார் மகிந்தவை டோச்சஸ்டர் விடுதியில் சந்தித்துள்ளனர்.
அதில் நீங்கள் பிரித்தானிய அரச விருந்தினராக இங்கு வராத காரணத்தால் தம்மால் முழுப் பாதுகாப்பை வழங்க முடியாது என அவர்கள் எடுத்துரைத்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே, மகிந்தவின் ஒக்ஸ்ஃபோர்ட் மாநாடு ரத்துச் செய்யப்பட்டதாக தற்போது செய்திகள் தெரிவிக்கின்றன.
கிங்ஸ்பெரியில் அமைந்துள்ள புத்த விகாரையின் முன்னால் உள்ள பூங்காவில் சுமார் 15 தமிழ் வாலிபர்கள் நின்றிருந்ததாகவும், அவர்கள் மகிந்தவைத் தாக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அது தவிர டோச்சஸ்டர் விடுதியில் இருந்து இலங்கைத் தூதரகம் நோக்கிச் செல்லும் பகுதியிலும் பல தமிழ் வாலிபர்கள் நின்றிருந்ததாகவும், மற்றும் இலங்கைத் தூதரகம், பிரபல்யமான சிலோன் பிரின்ஸஸ் உணவகம் முன்பு கூட பல தமிழர்கள் நின்றிருந்ததாகக் கூறப்படுகிறது. எப்படிப் பார்த்தாலும், எங்கு மகிந்த சென்றிருந்தாலும் அவ்விடம் முற்றுகையிடப்படும் அபாயம் பிரித்தானியாவில் இருந்திருக்கிறது.
இந்நிலையை நன்கு அறிந்த எம்.ஐ 5 உளவுப் பிரிவினர் ஜனாதிபதியை எச்சரித்துள்ளனர். இதனை அடுத்தே அவர் பிரித்தானியாவில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.
கருத்துரையிடுக