
விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் மற்றும் அரசியல்துறை நடுவப் பணியகம் போன்ற முக்கிய பகுதிகள் அமைந்த பகுதியை கைப்பற்றிய இராணுவத்தினர் அவற்றை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.
தமிழ் மக்கள் எவரையும் அந்தப் பகுதிகளுக்கு உள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் அண்மைய நாட்களாக தெற்கிலிருந்து வரும் சிங்கள சுற்றுலாப் பயணிகள் சமாதான செயலக வீதியின் முன்னால் நிறைந்து நிற்கின்றனர்.
அவர்களில் சுமார் நூறு பேர் வரையில் ஒவ்வொரு தடவையும் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். படையினரால் வெற்றி கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் தளங்களை பார்வையிட தம்மாலான முழுமையான ஒத்துழைப்பை மக்களுக்கு வழங்கி வருவதாக படையினர் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பகுதிகளில் வசித்த மக்கள் அங்கு மீளக் குடியமரவோ குறித்த பகுதிகளில் தங்கள் வீடு வளவுகள் எப்படி உள்ளன என்று பார்வையிடவோ அனுமதிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக