தன்னை இலங்கை புலனாய்வுத்துறையினர் மலேசியாவில் இருந்து கைதுசெய்து கூட்டிவந்தனர் என்றும் தான் சிறையில் இருப்பதாகவும் கூறிவரும் கே.பி என்று அழைக்கப்படும் பத்மநாபன் கடந்த 21ம் திகதி ரகசியமாக யாழ்ப்பாணம் சென்று அங்கு அவருக்காகவே நடாத்தப்பட்ட சில பிரத்தியேக நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார். தான் நடத்திவரும் நெரடோ என்னும் அமைப்பினூடாக உதவிகளைச் செய்யவே தான் யாழ் விஜயம்செய்ததாக அவர் செய்திகளைக் கசியவிட்டாலும், முந் நாள் புலிகளின் உறுப்பினர்களில் சிலரை இவர் அங்கு சந்தித்ததாகவும் அறியப்படுகிறது. புலிகளின் முந் நாள் ஊடகப் பொறுப்பளர் தயா மாஸ்டரைச் சந்தித்த கே.பி மேற்படி சில நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்துள்ளார்.
இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட சில முந் நாள் புலிகளின் உறுப்பினர்களையும் இவர் யாழில் சந்தித்ததோடு, தமது உறவினர்கள் வீட்டில் மதிய உணவு அருந்தியதாகவும் யாழில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழில் ஏழைகளுக்கு உதவச் சென்றதாக இவர் பரப்பிவரும் கதைகளுக்கு பின்னணி என்ன என்பதே தற்போது புலப்படாத விடையமாக உள்ளது. அவர் யாழ் வந்துசென்ற ஆதரங்களுக்கான வீடியோவும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக