காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர், ‘’சென்னை, திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் உள்ள தனியாருக்கு சொந்தமான சொத்துக்களை அரசு அதிகாரிகளின் உதவியோடு தி.மு.க.வினர் அபகரித்து வருகின்றனர். அதற்கான விவரங்கள் என்னிடம் உள்ளது. அதனை உரிய நேரத்தில் வெளியிடுவேன்’’என்று தெரிவித்தார்.
அவர் மேலும், ’’ தி.மு.க.வினரின் ஊழல்கள், குடும்ப அரசியல் காரணமாக வர உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும். இதனால் தி.மு.க., உடன் கூட்டணி தொடரக்கூடாது என்பது ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் கருத்தாக உள்ளது.
இது குறித்து கட்சி மேலிடத்திற்கு எடுத்து கூறிவருகிறோம். தமிழகத்தில் காமராஜ் ஆட்சி அமைக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளது’’என்று தெரிவித்துள்ளார்.
home



Home
கருத்துரையிடுக