
யாழ்ப்பாணத்தில் மகிந்த ராஜபக்ஷவின் மனைவி சிரந்தி ராஜபக்ஷ நடத்தவிருந்த நத்தார் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்கு, யாழ்ப்பாண மாவட்ட கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ பாதிரியார்களும் அக்கறை காட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் புனித மெதடிஸ்த தேவாலயத்தில் கடந்த சனிக்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக சிரந்தி ராஜபக்ஷ கலந்துக் கொள்ளவிருந்த போதும், இறுதி நேரத்தில் அவர் சமுகமளிக்கவில்லை, எவ்வாறாயினும், தென்னிலங்கையில் இருந்து பௌத்த துறவிகளும், முஸ்லிம் மத தலைவர்கள் சிலரும் இராணுவத்தினரால் இங்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
சிரந்தி ராஜபக்ஷ இந்த நிகழ்வுக்கு தலைமை வகிப்பதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, இந்தப் பூஜை நிகழ்வில் யாழ்ப்பாண மக்கள் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஆனாலும், யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் உள்ளிட்ட சிலர் இதில் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



கருத்துரையிடுக