டுபாய் நாட்டிலிருந்து 15 லட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி உபகரணங்களை சட்டவிரோதமாகக் கொண்டுவந்த வர்த்தகர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் என எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இக்கடத்தல் சம்பவம் குறித்து விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
home



Home
கருத்துரையிடுக