
வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் ஜெயசீலன் ஜெயபிரவீனா (வயது 25) என்ற யுவதியே காணாமல் போயுள்ளார்.
தனது அலுவலகத்திற்கு செவ்வாய்கிழமை (14.12.10) காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவர் அலுவலகத்தை சென்றடையாத நிலையில் அவரது சக ஊழியர்கள் அவரிடம் அலுவலக சாவி ஒன்றினை பெறும் நோக்கோடு வீட்டிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டபோதே அவர் அலுவலகம் சென்றடையவில்லை என வீட்டாருக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து அவர்கள் வவுனியா பொலிசாரிடம் முறைப்பாட்டை செய்துள்ளனர்.
வவுனியா சேமமடுவைச் சேர்ந்த இவர்கள் நீண்டகாலமாக வவுனியா குருமண்காட்டில் வசித்துவந்துள்ளனர்.
இதேவேளை கடந்த 9ஆம் திகதி வவுனியா நகர்ப்பகுதியில் வைத்து சேமமடுவை சொந்த இடமாக கொண்ட சாந்தகுமார் தனுதசன் என்ற 22வயது இளைஞனும் காணாமல் போயுள்ளமை தொடர்பில் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
கருத்துரையிடுக