
இதன்காரணமாக அவர் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் பிரித்தானியா செல்வதற்கு நுழைவு அனுமதி வழங்கப்படவில்லை.
கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நுழைவு அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார்.
ஆயினும் அவரது பெயர் கறுப்புப் பட்டியில் சேர்க்கப்பட்டுள்ளதால் பிரித்தானியத் தூதரகம் நுழைவு அனுமதி வழங்க மறுத்து விட்டது.
இதனாலேயே மகிந்த ராஜபக்சவுடன் அவர் பிரித்தானியா செல்ல முடியவில்லை.
ஏற்கனவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமெரிக்காவும் நுழைவு அனுமதி வழங்க மறுத்திருந்தது.
அதன்காரணமாக கடந்த செப்ரெம்பர் மாதம் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியுயோர்க் சென்ற மகிந்த ராஜபக்சவுடனும் அவரால் பயணத்தை மேற்கொள்ள முடியாது போயிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சிறிலங்கா அதிபருடன் அமைச்சர்கள், அதிகாரிகள் என்று சுமார் 40 பேர் வரை பிரித்தானியா சென்றிருந்தனர்.
அவர்களில் பலருக்கும் பிரித்தானியத் தூதுரகம் பலத்த இழுபறிகளின் பின்னரே கடைசி நேரத்தில் நுழைவு அனுமதியை வழங்கியிருந்தது.
இதன்காரணமாக மகிந்த ராஜபக்ச சென்ற விமானம் குறிப்பிட்ட நேரத்தை விடத் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துரையிடுக