
காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோரில் ஏழை, பணக்காரர் வித்தியாசம் கிடையாது. ராஜிவ் காந்தியை திருமணம் செய்து கொள்ள சோனியாவின் பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தகவல், இப்போது விக்கிலீக்ஸ் மூலம் வெளியாகியுள்ளது.
மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் மூத்த மகன் ராஜிவ். இளைய மகன் சஞ்சய். லண்டன் கல்லூரியில் ராஜிவ் படிக்கும் போது, இத்தாலியை சேர்ந்த சோனியாவை காதலித் தார். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுடைய காதல், திருமணம் பற்றி சோனியா இதுவரை பேசியதில்லை.
ஆனால், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண கவர்னர் அர்னால்டின் மனைவி மரியா ஷிவரிடம் சோனியா மனம் திறந்து சில விஷயங்களை பேசியுள்ளார். அந்த விவரங்களை இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ‘ரகசியம்’ என்று குறிப்பிட்டு, ‘மரியாவிடம் சோனியா பேசிய பேச்சு’ என்ற தலைப்பில் அமெரிக்காவுக்கு அனுப்பி உள் ளது. அதை இப்போது விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2006 ஆகஸ்ட் 4ம் தேதி அரசுமுறை பயணமாக இந்தியா வந்த மரியா, சோனியாவை சந்தித்தார். அப்போது அவருடன் சென்ற அமெரிக்க தூதரக அதிகாரிகள், இரு வருக்கும் நடந்த உரையாடல்களை டேப் செய்திருக்கலாம் என்று விக்கிலீக்ஸ் கூறியுள்ளது. மேலும், ‘பொதுவாக சோனியா அதிகம் பேசாதவர். பொது இடங்களில் யாருடனும் எளிதில் பழகாதவர். ஆனால், மரியாவுடன் உள்ள தனிப்பட்ட நட்பில் பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கலாம்’’ என்று விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.
‘ராஜிவை திருமணம் செய்து கொள்ள என் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி எப்படியோ நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்’ என்று மரியாவிடம் சோனியா கூறியுள்ளார்.
‘கடந்த 2004 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், பிரதமர் பதவி ஏற்காதது ஏன்’ என்று மரியா கேட்டதற்கு, ‘பலரும் இதையே கேட்கின்றனர். அது பற்றி முழு விவரங்களை என்றாவது ஒருநாள் புத்தகமாக எழுதுவேன். பதவி ஏற்காததற்கு நான் வருத்தப்படவில்லை’ என்று கூறியிருக்கிறார்
கருத்துரையிடுக