தெலுங்கில் ஹிட்டான 'விக்ரமார்க்குடு' படம் தமிழில் 'சிறுத்தை' என ரீமேக் ஆகிறது. ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ ஸ்கிரீன் தயாரிக்கும் இந்தப் படத்தில், கார்த்தி இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
அவர் ஜோடி, தமன்னா, இந்த படத்தில் சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படம் பற்றி இயக்குநர் சிவாவின் கருத்து தெலுங்கில் 'சவுர்யம்', 'சங்கம்' படங்களை இயக்கினேன்.
இதையடுத்து இந்தப் படத்தை இயக்குகிறேன். சாதாரண இளைஞனுக்கு அசாதாரண கடமையை முடிக்க வேண்டிய சூழல். அதை எப்படி முடிக்கிறான் என்பதுதான் கதை.
பெரும்பகுதி கதை நகரத்தில் நடந்தாலும் கிராமத்தில் நடக்கும் காட்சிகளும் இருக்கிறது. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுகிறது.
கார்த்தி, தமன்னா, சந்தானம் மூவருமே காமெடி பண்ணுவார்கள். ஒரு பாடல் காட்சியில் கார்த்தி ஒன்பது கெட்டப்பில் தோன்றுகிறார்.
இந்தப் பாடல் வித்தியாசமாக படமாக்கப்பட்டுள்ளது. ஐந்து மாடி கட்டிடத்திலிருந்து கார்த்தி குதிக்கும் காட்சி பரபரப்பாக இருக்கும்.
'சிறுத்தை' பொங்கலுக்குத் திரைக்கு வருகிறது. '19ஆம் தேதி' படத்தின் இசையை வெளியிட உள்ளோம் என்று, இந்த படம் நிச்சயமாக வெற்றி பெரும் என மழுமையாக நம்புவதாக இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார்.
home



Home
கருத்துரையிடுக