இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் தெளிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹேக் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். “ஸ்கை நியூஸ்” ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை மீது சுமத்தப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கை முறையான விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கை மற்றும் பிரித்தானிய நாடுகளுக்கிடையிலான இராஜதந்திரத் தொடர்புகளில் இடைக்கிடை தடங்கல்கள் ஏற்பட்டாலும் இரண்டு நாடுகளும் தொடர்ச்சியாக கருத்துப் பரிமாறல்களை மேற்கொள்கின்றன.
தற்போதைக்கு இரண்டு மாதங்களுக்கு முன் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸின் விஜயத்தின் போது நான் அவரைச் சந்தித்தேன். அதன் போதும் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு வலியுறுத்தினேன் என்றும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.
home



Home
கருத்துரையிடுக