
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி யில் வகுப்பு 9இல் கல்வி பயிலும் குகராஜா கேசாணன் என்னும் மாணவனே மேற்படி விஞ்ஞான பாடப் பரிசோதனையில் ஈடுபட்டி ருந்தபோது தீப்பற்றி உயிரிழந்தவராவார்.
மேற்படி சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
நேற்று முன்தினம் பிற்பகல் 4.30 மணியளவில் குறித்த மாண வன் தனது வீட்டில் வைத்து 9ஆம் ஆண்டு விஞ்ஞானப் பாடப் புத்த கத்திலுள்ள தீச்சுவாலை பற்றிய ஒரு பரிசோதனையை மேற்கொள் வதற்காக மண்ணெண்ணெயை ஒரு பாத்திரத்தில் இட்டு அதனை எரிய விட்டுச் சுழற்றிய போது திடீரென்று தனது உடலில் தீப்பற்றிய நிலையில் படுகாய மடைந்து மட்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.
இருந்த போதிலும் சிகிச்சை பயனளிக்காததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கருத்துரையிடுக