
வவுனியாவின் இரட்டைப் பெரிய குளம் பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றிலேயே பிரஸ்தாப சம்பவம் கடந்த 12ம் திகதி இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது புலனாய்வுப் பிரிவினர் குடிபோதையில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.
பொதுமக்கள் நடமாடும் இடத்தில் கெட்ட வார்த்தைகளைப் பிரயோகித்த வண்ணம், அநாகரீமாக நடந்து கொண்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தாலேயே கிராமவாசிகள் தாக்குதலுக்குள்ளானதாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
தற்போது குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டாலும் தாக்கியவர்கள் இதுவரை இனம் காணப்படவில்லை என்று தெரிய வருகின்றது.
கருத்துரையிடுக