News Update :
Home » » தலைவர் மகன் சாள்ஸ் அந்தோணி நச்சு குண்டு தாக்குதலில் கொலை செய்ய பட்ட புகைப்படங்கள் -உள்ளே புகுந்து விளையாடிய கருணா கும்பல்

தலைவர் மகன் சாள்ஸ் அந்தோணி நச்சு குண்டு தாக்குதலில் கொலை செய்ய பட்ட புகைப்படங்கள் -உள்ளே புகுந்து விளையாடிய கருணா கும்பல்

Penulis : Antony on திங்கள், 13 டிசம்பர், 2010 | பிற்பகல் 1:11


தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சாள்ஸ் அந்தோனி இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளி வாய்க்கால் பகுதியில் சிங்கள படைகளால் நச்சு குண்டு வீசி கொலை செய்ய பட்ட கோர காட்சி படங்கள் காணொளிகள் வெளியாகியுள்ளன .

இறுதி யுத்தத்தின் சிங்களம் தொடுத்த உக்கிர தாக்குதலை முறியடித்து எதிரிக்கு பலத்த இழப்புக்களை கொடுத்த வண்ணம் இருந்த சாள்ஸ் அந்தோனி புலிகள் இயக்கதிட்குள் இருந்து இறுதியில் பகைவர்களிட்கு விலை போனவர்களால் காட்டி கொடுக்க பட அவர் நின்ற பகுதியில் சிங்களம் நச்சு குண்டுகளை வீசி அவரையும் அவருடன் நின்ற தளபதிகளையும் கொன்று குவித்தது .

சாள்ஸ் தான் சிங்கள படைகளின் முக்கிய வான்தளங்கள் மற்றும் கேந்திர நிலையங்கள் மீது தாக்குதலை நடத்திய வான் புலிகளிட்கு தளபதியாக இருந்து செயல் பட்ட சிறப்பு வீரன் . இறுதியில் தான் நேசித்த மண்ணிலேயே தனது மக்களிட்காக தன் உயிரை ஈகம் செய்தார் .


புலிகள் அழிந்து போவதற்கு இறுதியில் புலிகளின் தலைமைக்குள் இருந்த சில எட்டப்பர்கள் விலைபோன நிலையில் ஈராக் யுத்தத்தில் நான்கு லட்சம் படைகள் சதாமின் கட்டளையை தாண்டி எதிரியின் கட்டைலைக்கு விலை போனவர்களால் வழிநடத்த பட்டது போல தமிழீழ மண்ணிலும் நடந்தேறிய அவலம் ஒரு காலத்தில் வெளி வரும் என புலம் பெயர்ந்த தேசங்களில் மறைந்து வாழும் முக்கிய விடுதலை புலிகளின் தளபதிகள் வாயிலாக முக்கிய தகவல் தமிழன முக்கிய நபர்களிட்கும் கூறபட்டுள்ளது .

அப்போதே இருதியுத்ததில் நடந்த விபரங்கள் எவை என தெரிய வரும் என தெரிவிக்க பட்டுள்ளது . விடுதலை புலிகளின் தலைமை இறுதியின் ஒரு கட்டத்தில் முக்கிய படையணிகள் மற்றும் தளபதிகளின் தொலை தொடர்புகள் துண்டிக்க பட்டிருந்தது .

அப்போது படையனிகளிட்கிடையில் நேரடியாகவே சந்தித்து பல விடயங்கள் பரி மாற பட்டன .அவ்வேலையே மக்களை கேடையமாக வைத்தும் அவர்களின் பிள்ளைகளை பல வந்தமாகவும் இயக்கத்தில் சேர்த்து கொண்டது புலிகள் படைகளிட்குள் புதிதாக ஊடுருவிய புதிய போராளிகள் என்ற சிங்கள படைகளின் கருணா படையணி . இவர்களின் வழி நடத்தளிலேயே இறுதியில் புலிகளின் படையணிகளின் தொடர்புகள் அற்றிருந்த போராளிகள் செயல் பட்டுள்ளனர் .

இதற்கு காருணாவின் வழி காட்டலில் செயல் பட்ட குழுவின் தலைமை ஒரு கட்டத்தில் செயல் இழந்த முக்கிய போராளிகள் அணியையும் வழி நடத்தி இராணுவத்தினரிடம் சரண் அடையும் முடிவை உண்மையான விடுதலை புலிகளின் தலைமை எடுபதட்குள்ளேயே சிங்கள படைகளின் புலனாய்வு படைகளின் கீழ் செயல் பட்ட கருணா குழுவிட்குள் சிக்குண்டு போனது.

இதனாலேயே பல போராளிகளும் மக்களும் இறுதியில் கண்மூடித்தனமாக அழிக்க பட காரணமாய் இருந்துள்ளது . இதில் இராணுவத்தினரிடம் சரண் அடையும் மக்கள் மீது புலிகள் சீருடையில் நின்ற கருணாமற்றும் ஆழ ஊடுருவும் சிங்கள படைகளே தமிழில் உரையாடிய படி அந்த மக்களிற்கு கேட்கும் வண்ணம் சுட்டு தள்ளினர் .

இதில் பல மக்கள் பலியாகினர் .அந்த பழியை புலிகள் மீது சுமத்தியது சிங்கள படைகளின் உருமறைப்பு செய்ய பட்ட ஆழ ஊடுருவும் படையணி . இவ்வாறு பல சம்பவங்கள் இறுதி யுத்தத்தில் இரத்த கரை படிய காரணாமாய் இருந்துள்ள சம்பவங்களை இறுதி களத்தில் நின்றவர்கள் என கூற பட்டவர்களால் நமக்கு தெரிவிக்க பட்டது .


வெளியில் சொல்ல முடியாத சில திடுக்கிடும் தகவல்கள் எம்மை அதிர வைத்தன . இந்த குறிப்புக்கள் ஒரு நாள் தமிழீழ விடுதலை புலிகளின் தலைமையால் நிச்சயம் மக்கள் முன் வைக்க படும் என கூறினார் .. இருதியுத்தில் புலிகள் ஏன் எவ்வாறு அழிக்கபட்டாரக்ள என்ற விபரம் மக்களை வந்தடையும் போது சமாதான தூதர்காளாக வேடம் போட்ட மேட்கத்தைய நாட்டவரும் பல விசமிகளும் மக்களால் இல்லாதொழிக்க படுவார்கள் என்பது திண்ணம் .

முள்ளி வாய்க்கால் முடிவல்ல ..மீண்டும் பிறப்பெடுப்பார்கள் புலிகள் ..இது கனவல்ல நியம் .

. கிபி முன்னூறாம் ஆண்டில் இருந்து கிபி தொளாயிரம் ஆண்டுகள் ஏறத்தாழ அறுநூறு ஆண்டுகள் சோழர் ஆட்சி இல்லாதொழிக்க பட்டு அந்த சோழ ஆட்சி மீள் எழ முடியாதென கங்கணம் கட்டிய அரசுகளுக்கு தமிழகத்தின் தஞ்சாவூரில் இருந்து பிறப்பெடுத்த சோழ வம்ச அரசனால் துடைத்தழிக்க பட்டு அவனது படைகள் அனுராத புரம் வரை வந்து அங்கு ஆண்ட ஆட்சியினையும் அழித்து தமிழ் ஆட்சியை நிலை நாட்டினான் என இலங்கை வரலாற்று சொல்கின்றது ..

அறுநூறு ஆண்டுகளின் பின் ஒரு சோழ மன்னன் வந்து அழிந்த தன் இனத்தை காத்தான் என்றால் ஏன் மீண்டும் பிராபா கரன்கள் வருகை இருக்காது என உண்மையான மானமுள்ள தமிழன் கூறுவதில் என்ன தவறு இருக்க முடியும் ...?

....தென் இலங்கையில் நடக்க விருக்கும் சில அதிர்ச்சி வைத்தியங்கள் ஊடாக இவை தெளிவு பெறும்..
முள்ளி வாய்க்கால் முடிவல்ல தொடரும்….


தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்.


நிசாந்தன்
இளையநிலா
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger