
ஒரு தடவையாவது ரங்கநாதன் தெருவில் நடந்து போகணும் என்பதுதான் நடிகை த்ரிஷாவின் ரொம்ப நாள் ஆசையாம்.
மிஸ் சென்னை போட்டியில் கலந்துக் கொண்ட நாளில் தொடங்கி, மாடலிங்கில் புகுந்து சினிமா நடிகையாகி முன்னணி இடத்தையும் தொட்டு விட்டார் த்ரிஷா.
தமிழ், தெலுங்கு என வலம் வந்துக் கொண்டிருந்த அம்மணி, கட்டாமிட்டா படம் மூலம் இந்தியிலும் கால் பதித்திருக்கிறார்.
ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ஆசை இருக்கும் அந்த ஆசை நிறைவேறுமா? நிறைவேறாதா? என்பது புரியாத புதிராக இருக்கும். அந்த மாதிரியான நீண்ட நாள் ஆசை ஏதாவது இருக்கிறதா? என்று த்ரிஷாவிடம் கேட்டால், சட்டென்று ஒரு ஆசையை சொல்கிறார்.
அது, சென்னை தி.நகரில் காலை 9 மணியில் தொடங்கி இரவு 11 மணி வரை பரபரப்புடன் காணப்படும் ரங்கநாதன் தெருவில் கூட்டத்தோடு கூட்டமாக ஒரு தடவையாவது நடந்து போக வேண்டும் என்ற ஆசைதான்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஈ.சி.ஆர். ரோடு ரிசார்ட்ல நாள் முழுவதும் நீச்சல் அடிக்கப் பிடிக்கும் என்று கூறியிருக்கும் த்ரிஷா, ரிலாக்சுக்காக அவ்வப்போது யு.எஸ். போவேன். மும்பையில் தாஜ் ஹோட்டலில் தங்குவது பிடிக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
கருத்துரையிடுக