
பெங்களூர் அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்தவர் சாமியார் நித்யானந்தா. இவர் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் சி.டி. வெளியானதை தொடர்ந்து அவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. இதையடுத்து நித்யானந்தா தலைமறைவானார். பெங்களூர் போலீசார் அவரை இமாசலபிரதேசத்தில் கைது செய்து அழைத்து வந்தனர்.
ஆசிரமத்தில் நடந்த பல்வேறு முறைகள் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. நித்யானந்தா தற்போது ஜாமீனில் விடுதலையானார்.
அவர் மீண்டும் ஆசிரமத்தில் தங்கி வழக்கமான பூஜைகளை நடத்தி வருகிறார். அவர் மீதான வழக்கு விசாரணை பெங்களூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில்லாஞ் ஏஞ்சல்ஸ் நகர் அருகில் உள்ள குட்டித் தீவை விலை பேச முயற்சி செய்தது சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நித்யானந்தாவின் சொத்து விவரங்கள் குறித்து சி.ஐ.டி. போலீசார் ஆய்வு செய்த போது அவர் குட்டித்தீவை விலைக்கு வாங்க பேரம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இந்த விவரங்கள் குறித்து குற்றச்சாட்டு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றப்பத்திரிகையிலும் போலீசார் குறிப்பிடவில்லை. யோகா சாமியார் பாபா ராம்தேவ் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 100 ஏக்கர் நிலத்தில் ஆசிரமம் அமைத்துள்ளார்.
அது போல் நித்யானந்தாவும் தீவை விலைக்கு வாங்கி ஆசிரமம் நடத்த திட்டமிட்டு இருந்தார்.
ஏற்கனவே நித்யானந்தாவுக்கு வெளிநாடுகளில் 15 இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன. இதில் அமெரிக்காவில் மட்டும் 4 இடங்களில் ஆசிரமம் உள்ளது
கருத்துரையிடுக