
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, தமது இறுதி அறிக்கையை அடுத்த மாதம் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பிலான மின்னஞ்சல் ஒன்று நிபுணர்கள் குழுவின் செயலகத்தினால் தமக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கையின் த ஐ லேண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அதனை வெளிப்படுத்துவதா? இல்லையா? என்பது குறித்து பான் கீ மூன் தீர்மானிப்பார் என குழுவின் செயலகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் தமது அறிக்கைக்கு சாட்சியம் வழங்கியவர்களின் பெயர் விபரங்கள் இரகசியமானதாக பேணப்படும் என அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இந்த சாட்சியங்கள் பெறப்பட்டதாகவும், அவை அனைத்தும் இரகசியமான முறையில் அறிக்கைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் தமக்கு மட்டுப்படுத்தப்பட்ட காலப்பகுதியே இந்த பணிகளுக்காக வழங்கப்பட்டிருந்ததது.
இந்த நிலையில், சாட்சியங்களை எழுத்து மூலம் அல்லது வாய் மூலம் வழங்குவதற்காக கடந்த ஒக்டோபர் மாதம் தாம் கோரியிருந்ததாகவும், நிபுணர்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
home



Home
கருத்துரையிடுக