
விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் மூலம் 250,000 மேற்பட்ட இரகசிய ஆவணங்கள் வெளியானதற்கு அசாங்சே காரணமல்ல.
அதற்கு பதிலாக அமெரிக்கர்களே அவற்றிற்கு பொறுப்பேற்க வேண்டுமென அவுஸ்த்திரேலியாவின் வெளிநாட்டமைச்சர் Rudd செய்தி நிறுவனமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் உண்மையில் அமெரிக்காவின் தகவல் பாதுகாப்பு நடைமுறைகளின் மீதே கேள்விகள் எழுப்பப்பட வேண்டும் அசாஞ்சே மீதல்ல என்று வலியுறுத்தினார்.
குறிப்பிட்ட ஆவணங்களை கையாளக்கூடியவர்களின் மட்டங்களிலேயே விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும். ஆவணங்கள் வெளியானதற்கு மூல காரணம் தனிப்பட்டவர்கள் தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அமெரிக்க முன்னாள் அமைச்சர் Robert McCallum அவுஸ்திரேலியாவின் கருத்துக்களை மறுத்துள்ளார். இது மற்ற நாடுகளை கலந்து ஆலோசிக்காமல் வெளியிட்ட கருத்தாகும் என்று தெரிவித்தார்.
கருத்துரையிடுக