ஆபாச இணையத்தளங்களை தடைசெய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ள சீனா சுமார் 60இ000 இணையத்தளங்களை தடைசெய்துள்ளது.மேலும் இதனுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் 5000 பேரை கைது செய்துள்ளனர்.
ஆபாச இணையத்தளங்களால் சிறுவர்கள் உளரீதியாக பாதிக்கப்படுவதாக இந் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சீனஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சுமார் 1.79 மில்லியன் இணையத்தளங்கள் பரீசிலிக்கப்பட்டுள்ளதுடன் 350 மில்லியன் ஆபாச புகைப்படங்கள்இ வீடியோக்கள்இ கட்டுரைகள் என்பன அழிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே பாதுகாப்பு காரணங்களின் பேரில் சீனாவில் யூடியூப், டுவிட்டர், பிளிக்கர் மற்றும் பேஸ்புக் ஆகிய இணையத்தளங்கள் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
home



Home
கருத்துரையிடுக