
படிப்பினைகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் தொடர்பான நல்லிணக்க ஆணைக்குழுவினர் கேட்டுக் கொண்டதையடுத்தே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு,கிழக்குப் பகுதிகளில் நல்லிணக்க ஆணைக்குழு நடத்திய அமர்வுகளின் போது காணாமற்போன தமது உறவினர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து தடுப்பு முகாம்களுக்கு நேரடியாகச் சென்ற ஆணைக்குழுவினர் காணாமற் போனவர்களைக் கண்டறிவது தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புப்பிரிவு காவல்துறையினருடன் பேச்சு நடத்தியிருந்தார்.
அப்போது காணாமற் போனவர்கள் தடுப்புமுகாம்களில் இருக்கின்றரா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் ஆணைக்குழுவின் தலைவர் கோரியிருந்தார்.
இந்தநிலையில் ஆணைக்குழுவுக்குக் கிடைத்துள்ள காணாமற் போனவர்கள் பற்றிய ஆவணங்கள் மொழி பெயர்க்கப்பட்டு, விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
இந்த ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் பெயர் விபரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
எனினும் இந்தப் பணி எப்போது நிறைவடையும் என்று காலஅவகாசத்தைக் கூற முடியாது என்று பயங்கரவாதத் தடுப்புக் காவல்துறைப் பிரிவின் இணைப்பாளர் அசல தசநாயக்க தெரிவித்தார்.
அதேவேளை, இந்த விபரங்கள் வெளியானதும், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும் என்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கருத்துரையிடுக