News Update :
Home » » இலங்கை அகதிகளுக்கு வழங்கிய உறுதிமொழியில் அவுஸ்திரேலிய அரசாங்கம் தோல்வி

இலங்கை அகதிகளுக்கு வழங்கிய உறுதிமொழியில் அவுஸ்திரேலிய அரசாங்கம் தோல்வி

Penulis : Antony on வியாழன், 16 டிசம்பர், 2010 | PM 2:33

இலங்கை அகதிகளுக்கு வழங்கிய உறுதி மொழி தோல்வியடைந்தமையால், அவுஸ்திரேலிய அரசாங்கம் புதிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஓசியானிக் வைக்கிங் கப்பல் மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்து அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உறுதி மொழியைத் தொடர்ந்து, இந்தோனேசியாவில் தரை இறங்கிய இலங்கை அகதிகள் தொடர்பிலேயே இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குறித்த அகதிகள் குழு, இந்தோனேசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து பகுதி பகுதியாக பிரித்து பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களுக்கான அகதி அந்தஸ்து விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மாற்று நாடுகளில் குடியேற்றம் செய்வதாக அவுஸ்திரேலிய அரசாங்கமும்; அவர்களுக்கு உறுதி அளித்திருந்தது.

இதன் படி, ஓசியானிக் வைக்கிங் கப்பலில் இருந்து இரண்டு சிறுவர்கள் அடங்களாக 17 பேர் ரோமானியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் அகதி அந்தஸ்து வழங்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள பின்னரும், அவர்களை கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக ஏற்க மறுத்துள்ளன.

இதனையடுத்து அவர்களை தொடர்ந்து ரோமனியாவில் தங்க வைக்க முடியாத நிலை காணப்படுகிறது.

எனவே அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வந்து வந்து முகாமில் தங்க வைக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் முயற்சித்து வருவதாக த சண்டே மோர்னிங் ஹெரால்ட் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் இலங்கை அகதிகள் மீண்டும் தாம் தடுத்து வைக்கப்படுவதாக இருந்தால் தாம் அவுஸ்திரேலியாவுக்கு திரும்பி வரப் போவதில்லை என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கிறிஸ்மஸ் தீவில் அகதிகளுக்கான வசதிகள் போதாத நிலையில் தங்களால் அங்கு தங்கி இருக்க முடியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அவர்கள் அனைவரும் நேர்மையான அகதிகள் என உறுதியாகியுள்ள நிலையில், அவர்கள் பலவந்தமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பவும் முடியாத நிலை அவுஸ்திரேலியாவுக்கு காணப்படுகிறது.

இந்த நிலையில் அவர்கள் அவுஸ்திரேலியாவிலேயே புகலிட அந்தஸ்து வழங்கப்பட்டு குடியேற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger