
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகர் கிராமத்தில் உள்ள மக்களை அவர்களின் சொந்த வீடுகளில் குடியமரவிடாது, தாழ்வான நிலப்பகுதியில் குடியமர்த்திய சிறீலங்கா அரசு, வெள்ளம் காரணமாக தமது சொந்த வீடுகளில் தற்காலிகமாக தங்கும் நோக்கத்துடன் சென்ற மக்களை மீண்டும் விரட்டியடித்துள்ளது.
கிளிநொச்சி பிரதேசத்தில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ள பூநகர் பிரதேசத்தை சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. அங்குள்ள வீடுகளில் நிலைகொண்டுள்ள இராணுவம் மக்களை தாழ்வான வேறு காணிகளில் குடியமர்த்தியிருந்தது.
ஆனால் வடக்கில் பெய்துவரும் தொடர் மழையினால் பல பகுதிகள் வெள்ளத்தால் நிரம்பியுள்ளன. இதனால் பெரும் துன்பங்களை சந்தித்த தமிழ் மக்கள் தமது சொந்த வீடுகளில் தற்காலிகமாக தங்கச் சென்றபோது அவர்கள் இராணுவத்தினரால் விரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களின் தற்காலிக குயிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், சிறுவர்களும், முதியவர்களும் தொற்றுநோய்களின் தாக்கத்திற்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துரையிடுக