
திண்டுக்கல் மலைக்கோட்டையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் இந்து மக்கள் கட்சி சார்பில் மூன்றரை அடி உயர அபிராமி அம்மன் கற்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தொல்லியல் துறை சட்டத்திற்கு புறம்பானது எனக்கூறி அச்சிலையை அதிகாரிகள் அகற்றினர். அகற்றிய சிலையை மீண்டும் நிறுவக்கோரி இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, பாரதிய ஜனதா, விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சாலை மறியல் மற்றும் போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக சிலையை பிரதிஷ்டை செய்த இந்து மக்கள் கட்சி மாவட்டத்தலைவர் தர்மர் உள்பட 5 பேரை திண்டுக்கல் தெற்கு போலீசார் கைது செய்தனர். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தர்மரை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேதாஜி பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் மலைக்கோட்டையில் இன்று சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்யப்போவதாக இந்து அமைப்புகள் அறிவித்தன.
இதனையடுத்து எஸ்பி தினகரன் அறிவுரையின்பேரில் மலைக்கோட்டை அடிவாரம், உச்சியில் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மலைக்கோட்டை பகுதிக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக