ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் விடயமும் எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் முறியடிக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த தடவை இலங்கையின் மனித உரிமைகள் மீறல் விடயங்களும் போர்க்குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் அமைத்துள்ள நிபுணர் குழுவின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த முறையை போலன்றி இந்த தடவை, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, அழுத்தங்களை பிரயோகிக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
home



Home
கருத்துரையிடுக