
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் நிலைமை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக சாவகச்சேரி மருத்துவமனை வட்டாரங்கள் மூலம் தெரிய வருகின்றது.
தற்போதைய நிலையில் அவரது ஆரோக்கியம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல்நிலையும் மோசமடைந்துள்ளது.
பேசும் சக்தியை முற்றாக இழந்துள்ள அவர், யாரையும் அடையாளம் காண்பதிலும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளார். அதற்கு மேலாக தற்போது அவர் முற்றாக சுய நினைவை இழந்த நிலையில் காணப்படுகின்றார்.
அவரது கணவர் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை காலமானது தொடக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கமே அவரைப் பராமரித்து வருகின்றார்.
இது தொடர்பில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தகவல் தருகையில்,
பார்வதி அம்மாளின் நிலைமை மோசமடைந்துள்ளதாக அவருக்குச் சிகிச்சையளித்து வரும் டாக்டர்கள் தன்னிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பார்வதி அம்மாளின் உறவினர்களுக்கு நான் தகவல் அனுப்பியுள்ளேன்.
சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், தற்போது சுய நினைவினை இழந்து விட்டார். அவரால் யாரையும் அடையாளம் காண முடியாதுள்ளது. அதே போன்று அவர் பேசும் சக்தியையும் இழந்துள்ளார். எனத் தெரிவித்தார்.
home



Home
கருத்துரையிடுக