
கத்தோலிக்கர்களுக்கு பாவ ஒப்புதல் வாக்குமூலத்தில் உதவக் கூடியதாகவும், சமயத்திலிருந்து விலகியிருப்பவர்கள் மீண்டும் விசுவாசத்துக்கு திரும்ப உதவக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்ட iPhone களுக்கு அமெரிக்காவின் கத்தோலிக்கத் திருச்சபை அனுமதியளித்துள்ளது.
பாவ ஒப்புதலுக்கான இந்த iPhone திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள முதலாவது ரோமன் கத்தோலிக்க iPhone என வர்ணிக்கப்படுகின்றது.
தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு பாவனையாளரினதும் மனசாட்சியை பரிசீலிக்கும் வகையில் இதன் மென் பொருள் வடிவமைக்கப் பட்டுள்ளதாக கம்பனி கூறுகின்றது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் கத்தோலிக்கர்களை தமது சமயத்தோடு ஈடுபாடு கொள்ள வருமாறு அழைப்பு விடுப்பதே எமது நோக்கம் என்று கம்பனிப் பேச்சாளர் ஒருவர் விளக்கமளித்துள்ளார்.
டிஜிட்டல் உலகில் கிறிஸ்தவர்களின் பிரசன்னத்தை வலியுறுத்தி பாப்பரசர் கடந்தாண்டு உலகத் தொலைத்தொடர்பாடல் மாநாட்டுக்குச் செய்தியொன்றை அனுப்பியிருந்தார்.
இதுவே மேற்படி கண்டு பிடிப்புக்குக் காரணம் என்றும் கம்பனி விளக்கமளித்துள்ளது.
கருத்துரையிடுக