
உலகின் மிகப்பெரிய கோதுமை உற்பத்தி நாடாக விளங்கும் சீனாவில் கோதுமை விவசாயம் வெகுவாக பாதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் முக்கிய விவசாயப் பகுதிகளில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவு வறட்சி காணப்படுவதாக அந்நாட்டு அரசு ஊடகம் நேற்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஷான்டாங் மாகாணத்தின் உணவு தானிய உற்பத்தி 200 ஆண்டுகளில் காணப்படாத வகையில் வறட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த மாத இறுதிக்குள் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
எகிப்து மற்றும் அரபு நாடுகளில் நடைபெறும் போராட்டங்களால் ஏற்கெனவே கோதுமை விலை உயர்ந்துள்ளது.
தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ள சீனா கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களை இறக்குமதி செய்தால் அது இறக்குமதியை மட்டும் நம்பியிருக்கும் ஏனைய நாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் கோதுமை பயிரிடப்படும் 140 லட்சம் ஹெக்டேர் நிலத்தில், 50 லட்சம் ஹெக்டேர் நிலம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 25 லட்சம் பொதுமக்களும் 27 லட்சம் மற்ற உயிரினங்களும் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர் என்றும் ஐநாவின் உணவு முகமை தெரிவித்துள்ளது.
கருத்துரையிடுக