
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் 118 பேரை புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் இதுவரை காலமும் பூசா தடுப்பு முகாமில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இன்று அவர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிசாரினால் கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர்.
பிரஸ்தாப சந்தேக நபர்கள் தொடர்பில் ஆய்வொன்றை மேற்கொண்டிருந்த சட்டமா அதிபர் திணைக்களம் அவர்கள் புனர்வாழ்வுக்குட்படுத்தப் பொருத்தமானவர்கள் என்று இனம் கண்டு அதற்கான பரிந்துரையை நீதிமன்றத்திடம் முன் வைத்திருந்தது.
அதனைக் கவனத்திற் கொண்ட நீதிமன்றம் அவர்கள் அனைவரையும் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பி வைக்குமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
home



Home
கருத்துரையிடுக