
எம்.ஜி.ஆர். வழிவந்த ஜெயலலிதா அரசு புரட்சி கரமாக செயல்பட்டு புதிய வரலாறு படைக்க வாழ்த்துகிறோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் கூயுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நடந்து முடிந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்ற அ.தி.மு.க.வுக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சாமானிய மக்களை வெகுவாக பாதித்திருக்கும் விலைவாசியைக் குறைக்கவும் மின்வெட்டை சீர்செய்யவும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு முதல் அமைச்சர் பொறுப்பேற்க இருக்கும் ஜெயலலிதாவை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
எங்கள் வணிகர் பேரவை நடத்திய விலைவாசி உயர்வு எதிர்ப்பு மாநாடு அமோக வெற்றி பெற்றதைப் போல அதன் கருத்தின் வலிமையும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கின்றது என்பது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.
அரசின் கஜானா சார்ந்த பொருளாதாரக் கொள்கைகள் கைவிடப்பட்டு மக்கள் நலனும் மக்களின் சுயதொழில்களும் காக்கப்பட வேண்டும். அந்நிய ஆதிக்கத்தில் இருந்து நாட்டின் சுதந்திரம் காக்கப்படவேண்டும்.
அதற்கு ஏற்றாற்போல் தவறான பொருளாதாரக் கொள்கைகள் கைவிடப்பட வேண்டும். அதற்கு எம்.ஜி.ஆர். வழிவந்த ஜெயலலிதா அரசு புரட்சி கரமாக செயல்பட்டு புதிய வரலாறு படைக்க வாழ்த்துகிறோம். இவ்வாறு த.வெள்ளையன் கூறினார்.
கருத்துரையிடுக