இலங்கையில் 1998 ஆம் ஆண்டிற்கும் 2011 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட 1500சித்திரவதைச் சம்பவங்கள் பற்றிய அறிக்கையொன்றை ஆசிய மனித உரிமைகள் ஆணை க்குழு தொகுத்து வெளியிட்டுள்ளது. இவற்றில் 323 சித்திரவதைச் சம்பவங்கள் மிகவும் பாரதூரமானவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக சித்திரவதைக்குள்ளான அனைவரும் பொலிஸாரால் தான் தோன்றித் தனமான முறையில் சோடிக்கப்பட்ட குற்றச் சாட்டுகளின் பேரிலே கைது செய்யப்பட்டவர்கள் என்பதாகும்.
இத்தகைய சோடிக்கப்பட்ட குற்றச் சாட்டுக்களின் பேரில் பெருந்தொகையானோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வருகின்றமை இலங்கையில் குற்றவியல் நீதி முறைமையில் அதிகளவு அதிர்ச்சியளிக்கும் அம்சமாகக் கருதப்படுகின்றது. குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள வைப்பதற்காகவே இச் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
home



Home
கருத்துரையிடுக