News Update :
Home » » கணவனைக் கொலை செய்ய கள்ளக் காதலனுக்கு உதவிய மனைவி

கணவனைக் கொலை செய்ய கள்ளக் காதலனுக்கு உதவிய மனைவி

Penulis : ۞உழவன்۞ on வெள்ளி, 24 ஜூன், 2011 | AM 12:36


விழுப்புரம் நாராயணா நகரைச் சேர்ந்தவர் தீனதயாளன்(28). பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார். இவரது மனைவி லட்சுமி(27). காதல் திருமணம் செய்து கொண்டனர். ரேணுகாதேவி(6), கீர்த்தனாதேவி (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் தீனதயாளன் வீட்டின் படுக்கை அறையில் கடந்த 21ம் தேதி கை, கால் கட்டப்பட்ட நிலையில் அடித்து கொல்லப்பட்டு கிடந்தார். மனைவி லட்சுமி (27) கை, கால், வாய் கட்டப்பட்டு இருந்தது. மகள்கள் வீட்டில் இருந்துள்ளனர்.

விழுப்புரம் தாலுக்கா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். மகன் சாவில் மருமகள் லட்சுமி, அவரது தந்தை சப்&இன்ஸ்பெக்டர் நாகராஜ் மீது சந்தேகம் இருப்பதாக தீனதயாளன் தாயார் பிரேமா புகார் கொடுத்தார்.

லட்சுமி கொடுத்த தகவலும், அவரது மகள் ரேணுகாதேவி கொடுத்த தகவலும் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் லட்சுமி மீது சந்தேகம் ஏற்பட்டு அவரது செல்போனை சோதனையிட்டதில், ஒரே எண்ணிற்கு நீண்ட நேரம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்மூலம் விருத்தாசலம் முல்லாத்தோட்டத்தைச் சேர்ந்த முத்தமிழ்செல்வன் (33), மோகன் (22) பிடிப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

போலீசிடம் முத்தமிழ்செல்வன் கூறியதாவது:
விருத்தாசலம் காவல் நிலையத்தில் 2006ல் சப்&இன்ஸ்பெக்டராக நாகராஜ் பணியாற்றியபோது எனக்கு அறிமுகமானார். அப்போது அவரது மகள் லட்சுமியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

3 ஆண்டுகளாக நெருங்கி பழகினோம். திருமணம் ஆனபின்னர் கடைக்கு தீனதயாளன் சென்றதும் வீட்டிற்கு என்னை லட்சுமி வரவழைத்தார். இதை அறிந்த தீனதயாளன் மனைவியை கண்டித்தார். தந்தை வீட்டிற்கு லட்சுமியை அனுப்புவதை தீனதயாளன் தவிர்த்தார்.

இது நாகராசுக்கு ஆத்திரம் அடைய செய்தது. வழக்கு விசாரணைக்கு விருத்தாசலம் சென்றுவரும்போது என்னிடம் மருமகன் தீனதயாளனை அடக்கி வைக்க வேண்டும் என நாகராஜ் கூறினார்.

இதற்கிடையில் லட்சுமி, தீனதயாளன் பயங்கர தொல்லை கொடுத்து வருவதாகவும், அவரை தீர்த்துக்கட்டும்படி ஒரு மாதமாக செல்போனில் வலியுறுத்தினார். இதற்காக, கடந்த 20ம் தேதி நண்பர் மோகனுடன் வந்தேன்.

மறுநாள் அதிகாலை 2 மணிக்கு லட்சுமி ஏற்பாட்டின் பேரில் தீனதயாளன் வீட்டு போர்ட்டிகோ கதவை திறந்து வைத்திருந்தார். படுக்கை அறையில் தூங்கி கொண்டிருந்த தீனதயாளன் தலையில் இரும்பு பைப்பால் பலமாக தாக்கினோம். இதில் அவர் இறந்தார்.

எங்களை அடையாளம் காணாமல் இருக்க மஞ்சள் தூளை அங்கு தூவினோம். கழுத்தில் இருந்த தாலியை லட்சுமி அறுத்து என்னிடம் கொடுத்தார். பீரோவில் இருந்த நகைகளையும் கொடுத்தார்.

இதையடுத்து தீனதயாளன் உடலை மூன்று பேரும் சேர்ந்து கயிற்றால் கட்டினோம். லட்சுமியை கயிறால் கட்டி போட்டு விட்டு தப்பினோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையத்தில் வைத்து முத்தமிழ்செல்வன், மோகன் ஆகியோரையும், விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையத்தில் வைத்து லட்சுமியிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

மருமகனை மிரட்டுவதற்காக முத்தமிழ்செல்வன் உதவியை சப்&இன்ஸ்பெக்டர் நாகராஜ் நாடினாரா? என்ற கோணத்தில் தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger