
தனது மகன் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்கள் வந்ததையடுத்து மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி அவசரமாக டெல்லியிலிருந்து மதுரை திரும்பினார்.
சென்னைக்கு வந்தால் தலை இருக்காது என்று துரை தயாநிதிக்கு மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்ததாக செய்திகள் வெளியானது. தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தொடர்ந்து டெல்லியிலேயே முகாமிட்டிருந்த அழகிரி, இந்த மிரட்டல்களையடுத்து நேற்று மாலை அவசரமாக மதுரை திரும்பினார்.
இந்த மிரட்டல்கள் பழைய நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து தான் வந்துள்ளதாக அழகிரியிடம் தயாநிதி கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து துரை தயாநிதியை டெல்லிக்கு அழைத்துச் செல்லவும் அழகிரி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
கருத்துரையிடுக