
இலங்கை அரசானது விடுதலைப் புலிகளை யுத்தத்தில் வெற்றிகொண்ட பின்னர் அவ்வியக்கத்தின் பல முக்கிய தளபதிகள் முள்ளிவாய்க்காலில் இருந்தும் வேறுபகுதிகளில் இருந்தும் தப்பிச் சென்றதாக பல செய்திகள் தெரிவித்தன. அவற்றினுள் தளபதி ராமும் அடங்குவார். பெயர் குறிப்பிட முடியாத காட்டுப்பகுதி ஒன்றினுள் அவர் இருப்பதாகவும் சிதறிக்கிடக்கும் விடுதலைப் புலிகளை ஒன்றுசேர்த்து அவர் புதிதாகப்போராட இருப்பதாக இலங்கை அரசு வேண்டும் என்றே கதைகளைக் கட்டிவிட்டது.
2010ம் ஆண்டு மாவீரர் தின உரையை தாமே நிகழ்த்தவிருப்பதாகவும் அதனை ஊடகங்களில் வெளிக்கொண்டுவரவேண்டும் எனவும் கூறி அவர் பல ஊடகங்களுடன் நேரடியாகத் தொடர்புகளை மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் தொடர்புகொள்ள பாவிக்கப்பட்ட மோபைல் இலக்கங்கள் அனைத்தும் தற்போது செயலிழந்து காணப்படுவதாக கூறப்படுகிறது.
அவற்றில் ஒரு மோபைல் இலக்கம் முஸ்லீம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமாகவும் மாறியுள்ளது. அதுமட்டுமல்லாது தளபதி ராம் தற்போது உயிருடன் இல்லை என இராணுவத்தின் புலனாய்வுத் துறைக்கு நெருக்கமானவர்கள் தற்போது தெரிவித்திருப்பதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. திரும்பவும் போராட இருப்பதாக ஒரு பொய்யான செய்தியை இலங்கை இராணுவம் கட்டவிழ்த்து விட்டதும் போதாது என்று, தமிழ் நாட்டில் இருந்து ஊடகவியலாளர் பாண்டியனை அழைத்து அவர் நேரே பார்த்ததுபோல ஒரு செய்தியையும் இலங்கை அரசு திட்டமிட்டு போடச்செய்தது. இலங்கையில் உள்ள இருண்ட மலை என்னும் பிரதேசத்தில் கேணல் ராம் படு பயங்கர ஆயுதங்களோடு விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு பயிற்சி கொடுப்பதாக பாண்டியன் கதைகளைக் கட்டவிழ்த்தார். சிங்களம் போட்ட எலும்புத்துண்டுக்கு பாண்டியன் வாலாட்டினார்.
இக் கதைகள் பக்கம் பக்கமாக இணையங்களிலும் ஊடகங்களிலும் வெளியாக பல மக்கள் ராமுக்கு நிதியுதவி செய்துள்ளனர். அதுமட்டுமல்லாது ராம் நேரடியாகவே தொலைபேசி மூலம் பல நபர்களைத் தொடர்புகொண்டு பணம் அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனை நம்பி பலர் அனுப்பியுள்ளதையும் எவரும் மறுக்க முடியாது. இவ்வாறு அனுப்பப்பட்ட பணத்தில் சுமார் 200,000 பவுன்ஸ்சுகள் பிரித்தானியாவில் இருந்து மட்டும் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிற நாடுகளில் இருந்து எவ்வளவு பணம் சென்றது என்ற கணக்கு இன்னும் தெரியவில்லை. இந் நிலையில் பணம் முழுவதையும் இலங்கை அரசு கைப்பற்றிக் கொண்டு இறுதியில் அவரைக் கொலைசெய்துவிட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.
சிங்கள காட்டுப் பகுதியில் முகாம் ஒன்றை அமைத்து அங்கே புதிதாகச் சேரும் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி கொடுப்பதுபோல பாசாங்கு செய்யச் சொல்லியது இலங்கை அரசு. அதனைச் சென்று பார்க்க சில ஊடகங்களுக்கு மறைமுகமாக அனுமதியையும் வழங்கியதும் சாட் சாத் இலங்கை அரசே. அதனை விடுதலைப் புலிகளின் இரகசிய பயிற்சி முகாம் என்ற போர்வையில் நடத்தியும் வந்தது. ஆனால் அங்கே பயிற்சியில் ஈடுபட்ட ஒருவர் தற்செயலாகச் சுட்டபோது கேணல் ராம் உயிரிழந்துவிட்டதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது. இச் செய்தியை சுயாதீனமாக உறுதிசெய்யமுடியவில்லை என்பதனையும் இங்கே அறியத்தருகிறோம். இல்லை இதுவும் இலங்கை அரசு வேண்டும் என்றே கட்டவிழத்த கதையாகவும் இருக்கலாம். எது எவ்வாறு இருந்தாலும் கேணல் ராம் அவர்கள் தற்போது உயிருடன் இல்லை என சிலர் அடித்துச் சொல்கிறார்கள்.
அதிர்வு
கருத்துரையிடுக