மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களிலும் மிக நீண்டகாலமாக பாரிய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பாரிய கொள்ளைக்கோஷ்டியொன்றை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்ததாக மாவட்ட தலைமையக பொலிஸ் அத்தியட்சககர் சஞ்சித் வனராஜா தெரிவித்தார். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரவீந்திர கரவெட்டவின் பணிப்புரையின் பேரில் தலைமையக பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் வனராஜாவின் வழிகாட்டலில் தமைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி கே.சாந்தகுமார் தலைமையில் இச்சுற்றிவளைப்பு நடாத்தப்பட்டு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களிடமிருந்து 12 இலட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் கம்பியூட்டர்கள், ஒலிபெருக்கி சாதனங்கள் தங்க நகைகள் உட்பட பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
home



Home
கருத்துரையிடுக